Friday, March 25, 2022
மல்லிகைப் பூ நெனப்பு...
Monday, March 21, 2022
'கவிதைகள் பழகுபவன்' ..
'கவிதைகள் பழகுபவன்'
"நமக்குத் தொழில் கவிதை…
நாட்டிற்கு உழைத்தல்…
இமைப் பொழுதும்
சோராதிருத்தல்…"
-என்றார் முண்டாசுக் கவி 'பாரதி'.
"பாரதியின்' கவிதை...
பார்க்கும் பார்வையில்…
வெள்ளையனை நுழையவிடாது முறுக்கிய அவரது கரிய மீசையில்…
தலைக்குக் கட்டிய
முண்டாசுத் துணியில்…
நெற்றியின் திலகத்தில்…
-என சகலத்திலும் 'கவிதை' எனும் நெருப்பு கணன்று கொண்டே இருந்தது.
சொற் புதிதாய், பொருள் புதிதாய் சோதி மிக்க 'நவ கவிதையாய்' உருக் கொண்டது 'மீசைக்கவியின்' கவிதைகள்.
" விசையுறு பந்தாக மீளும் வரம் கேட்பேன்" - எனப் பாடினார் மகா கவி 'பாரதி' .
கவிதை போல கவிதை எழுதி தன்னை கவிஞன் என்று சொல்லச் சொல்பவன் அல்ல பாரதி. கவிஞனாகப் பிறந்ததனால் கவிதை எழுதியவன் பாரதி" - என பார(தீ)தியை உயர்த்திப் பிடித்தார் கவிப்பேரரசு 'வைரமுத்து' .
கவிப் பேரரசு. திரு. வைரமுத்துவின் திரைப்பாடல்களில் கவிதைகள் கற்கலாம். திரைப் பாடல்கள் வழி கவிதைப் பாடங்கள் சொல்லியவர் கவிப்பேரரசு. ஒவ்வொரு பாடலும் ஒரு கவிதை.
'மரபுக் கவிதை' எழுத இலக்கணம் அறிதல் அவசியம். 'மாற்றம்' எனும் ஆழிப்பேரலை மரபெனும் கரை உடைத்து புது வெள்ளமாகி புதுக்கவிதையாக மனங்களின் மடை திறந்தது.
இன்று வீட்டிற்கு ஒரு கவிஞரேனும் நிச்சயம் இருப்பார்கள்.
சிறு குழந்தை கை பற்றி நடக்கும் நடை வண்டியாக
'கவிதை' தன் கை கொண்டு நம்மை அழைத்துச் செல்கிறது.
"விழுந்தால் கவிதை…
எழுந்தால் கவிதை…
மறக்க ஒரு கவிதை.
நினைக்க ஒரு கவிதை…
அழ ஒரு கவிதை…
நிமிர ஒரு கவிதை…
சாய்ந்து கொள்ள ஒரு கவிதை!"
சகலமும் கவிதை மயமாக ஊர் கூடி இழுக்கும் தேராக 'கவிதை ' நாளும் கடக்கிறது.
"இன்னைல இருந்து நானும் கவிஞன்" என தமிழை துணைக்கு அழைத்து
" உன்னை விட்டேனா பார்" என 'அ' முதல் 'ஆய்தம்' வரை ஆராய்ந்து 'உயிர் மெய்' கண்டு மெய் மறந்து கவிஒன்றைத் தட்டிவிட்டு முடிவில் ஆச்சரியக் குறியோ, அல்லது கேள்விக் குடையோ விரித்து ( என்னைப் போல) மறக்காமல் மூன்று புள்ளிகள் இட்டு முடித்தால்
" கவிஞன் யான் "எனச் சொல்லிக் கொள்ளலாம்.
இன்று உலக கவிதைகள் தினமாம்.
விடுவேனா! .
ஆச்சரியக் குறிகள்! ,
கேள்விக் குடைகள்? , மூன்று புள்ளிகள்…
எல்லாம் தயார்.
'கவிதை' போல 'கவிதை' எழுதி நடை வண்டி பிடித்து கவிநடை பயிலும் ஒரு குழந்தையாக நானும் தயார்.
'கவிதை' எனப்படும் 'கவிதை 1'
"செக்கு மாடுகளாக
கடிகார முட்கள்.
கனவுகளைப் பிரிக்கிறது…
காலம்.
முட்களின் பாதையில்
பூக்களும் இருக்கலாம்!
எதுவாயினும்…
வாழ்வின் பயணமே அழகு!"
-இருதய். ஆ
'கவிதை' எனப்படும் 'கவிதை 2'
"'நான்' " என்பது
நொடியா?
நிமிடமா?
கேள்விகள்…
கடிகாரப் பெண்டுலமானது.
காது திருகி
ஆசிரியனாக
காதோரம்…
சொன்னது காலம்.
'நீ' என்றும் 'நொடியடா'!
- இருதய். ஆ
உண்மையில் 'கவிதை' என்பது தூண்டிலோ?
என கேட்கத் தோன்றுகிறது. சகலத்திலிருந்தும் மீட்டெடுக்கும் 'தூண்டில்' 'கவிதை' என்றால் மனம் மீனாகத் தூண்டிலில் மாட்டிக் கொள்வதில் மகிழ்வே.
கவிதை என்பது…
' ஆற்றல் மிக்க உணர்ச்சிகள் தாமாகப் பொங்கி வழிவதே "கவிதை" (Spantaneous overflow of powerful feelings)'
ஆங்கிலக் கவி 'வில்லியம் வோர்ட்ஸ்ஒர்த்'.
ஆச்சரியக் குறிகள்!, கேள்விக் குடைகள்?, மூன்று புள்ளிகளோடு கவிதை எனும் தேர் பிடித்து இழுக்க அழைப்பிதழ்கள் தேவையில்லை. அணைமீறும் வெள்ளமாக எண்ணங்கள் எழுந்தால் போதும்."' 'யானும் கவி என்ற கவியே'
என சொல்லிக் கொள்ளலாம்.
- இப்படிக்கு கவிதைகள் பழகுபவன்.
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்…
Friday, March 18, 2022
பறக்கும் பாவைகள்...
தடங்கல்களும் இல்லை.
வானமே பறக்கும் பாவையரின் எல்லை!...
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்…
Friday, March 11, 2022
காகிதப் பூ நெனப்பு(2)
உண்மையில் எனக்குப் பாடங்கள் மண்டையில் ஏறாது. அது ஒரு காலம். கல்லூரிக்குள் நுழைந்த போது தான் 'கல்வி' மீதான புரிதல் ஏற்பட்டது. அதற்கு முன்னர் வரை கல்விக் கூடம் செல்வதை 'எனது போறாத காலமாக' நினைப்பேன்.
நான் அமர்ந்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் கிளி ஜோசியர் அமர்ந்து அவ்வப்போது வந்து அமர்பவர்களுக்கு ஜோசியம் சொல்லுவார்.
எதிர் காலம் உரைப்பார். கிளி லாவகமாக சீட்டுக்களை எடுத்துக் கொடுத்து சட்டகப் பெட்டிக்குள் சென்று வேடிக்கை பார்க்கும்.
"காகிதப் பூக்களின்" நினைவுகள் அலாதியானது. 'தூயமரியன்னை' பள்ளிக்கு வெளியே நிமிர்ந்து நிற்கும் தேவாலய சுற்றுப் பகுதிகளெங்கும் 'காகிதப் பூக்கள்' வேலியாகப் படர்ந்து கண்களை நிறைக்கும். ஜெய்ஹிந்துபுரத்து வீதிகளில் பெரும்பாலும் 'காகிதப் பூக்கள்' வேலிக்கொடி பிடித்து விழித்திருக்கும். அப்பொழுது 'ஜெய்ஹிந்துபுரம்' பதட்டம் நிறைந்த பகுதியாகப் பார்க்கப்பட்டது.
சர்வ சாதாரணமாக பகற்பொழுதில் 'கத்தி கபடாக்களோடு' தலை தெறிக்க ஓடி வருவார்கள். பதட்டமாக கத்தியபடி கடந்து போவார்கள். கண் எதிரே மனம் பதறும் காட்சிகள் அரங்கேறும்.
இப்பேற்பட்ட பகுதியில் பெரிய வீடுகளில் சம்பளம் வாங்காத காவல்காரர்களாக 'காகிதப் பூக்கள்' முள்ளோடு கொடி பிடித்து படர்ந்து நிற்கும். காகிதப் பூக்கள் வேலிக்காரனாகக் காவல் காக்க காணும் கண்களின் வழியே மனம் கொள்ளை போகும்.
நிறைய பகிர எண்ணுகிறேன். காலம் கருதி 'காகிதப் பூக்களை' இதயத்திற்கு அருகில் மனதளவில் இருத்தி முடிக்கிறேன்.
ஜெய்ஹிந்துபுரத்து வீட்டைக் காலி செய்து புறப்பட்ட அன்று அங்கிருந்து நேரே பள்ளிக்குச் சென்றுவிட்டோம். பள்ளி முடிந்து மாலையில் நாங்கள் மூவரும்(அண்ணன், தம்பி) நேரே நாங்கள் புதிதாகக் குடி பெயர்ந்த மதுரை அண்ணாநகரின் 'அன்னை வேளாங்கண்ணி நகர்' வீட்டிற்குத் திரும்பினோம்.
காலையில் ஜெய்ஹிந்துபுரத்தைக் கடக்கும் முன் 'காகிதப் பூக்களின்....
வீட்டு 'காகிதப் பூக்களை' கையோடு எடுத்துக் கொண்டேன்.
மாலையில் 'அன்னை வேளாங்கண்ணி நகர்' சென்றபோது அங்கிருந்த வீடுகளெங்கும் 'முல்லைப் பூக்கள்' கொடி பிடித்து மனம் பரப்பின.
வாசமற்ற 'காகிதப் பூக்கள்' எனது பைகளில் உறைந்து கிடக்க வாசம் மிக்க 'முல்லைப் பூக்கள்' தோரணங்கள் கட்டி வரவேற்றன.
'முல்லைப் பூக்கள்' பச்சைக் கொடி அசைத்து எங்கள் வாழ்வின் புதிய அத்தியாயங்களைத் தொடங்கி வைத்தன.
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்…
இருதய். ஆ
அலாவுதீனும், அற்புத விளக்கும்...
மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...

-
மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...
-
' வானிலை அறிக்கை' பெரும்பாலும் அறிக்கைகளைப் பொய்யாக்கும். " சா... பூ... த்ரீ" போட்டு ' கிளியாங் கிளியா...
-
கேள்வியிலிருந்தே இந்தப் பதிவை தொடங்குகிறேன். உங்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் எது? பிடிக்காத இடம் எது? இயல்பாகவே எதிர்கொள்ளும் ...
-
' ஏப்ரல்' மாதம் சூட்டோடு சூடாகத் தனது ஓட்டத்தை ஓடி முடித்து இறுகப் பிடித்த சூட்டை தயார் நிலையில் இருக்கும் 'மே' ம...
-
மனப்பறவையில் முதன்முறையாக எனது சிறுகதையைப் பகிர்கிறேன். வாசித்து முடித்து முடியுமானால் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். கட்டாயம் ஒன்றுமில்லை....
-
நல்ல வெயிற் பொழுது. சாலைப்பூச்சின் தார் உருகி வாகனங்களின் சக்கரப் பற்களோடு ஒட்டிக் கொண்டு 'உன்னை விட்டேனா பார்' என்றபடி வட்டச்சுற...
-
Fly... மனம் கொத்தும் பறவை நம் எண்ணம் நம் வண்ணம்... நிறங்களில் விரியும் வாழ்வு! கடக்கும் நொடிகளில், கடக்கும் நிமிடங்களில், கழ...
-
Fly... மனம் கொத்தும் பறவை... "மங்கள இசை" உங்கள் செவிகளுக்குள்... சுற்றிச் சுழலும் பூமியும் புவனம் போற்றும் தாய்மை...
-
" திருநாட்களை விட திருநாளுக்காக காத்திருக்கிற, தயாராகிற தருணங்கள் தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். அப்படி " முக...
-
Fly.. . மனம் கொத்தும் பறவை காஞ்சி 'பட்டு' திண்டுக்கல் 'பூட்டு' மணப்பாறை 'முறுக்கு' ஸ்ரீ வில்லிப்புத்தூர் 'பா...