Www.
மனப்பறவை.comஒரு மனம் இரு சிறகு
பேறுகாலம் முடிந்து பிள்ளைப்பேறு அடைந்து தான் பெற்றெடுத்த தன் குழந்தையோடு 'மறுபடியும்' தன் தாய் வீட்டிற்குத் திரும்பும் மகளிரின் மனநிலையை நான் மனப்பறவையின் எழுத்துக்களத்திற்குள் நுழையும் போதெல்லாம் உணர்வேன்.
காரணம் படுக்கையைச் சுருட்டிக் கொண்டு என்னை எழுந்து நடக்க வைத்தது எழுத்தும், வாசிப்பும் தான். எழுதவே Blog-ல் கணக்கைத் தொடங்கினேன்.
முதலில் 'மனம் கொத்தும் பறவை' என இருந்தது பின்னர் 'மனப்பறவை' ஆனது.
'மனம்கொத்தும் பறவை'
'வீடு' என்கிற கட்டுரைக்குப்பின் நான் மனப்பறவைக்கென எழுதுகிற கட்டுரை இது. இடையில் மனம்கொத்தும் பறவையின் ஒளிவழிக் கதையான அலாவுதீனும், அற்புத விளக்கும் பகிர்ந்தேன். மனப்பறவைக்காக எழுதவில்லை. நெடிய இடைவெளிக்குப் பிறகு எழுதும் கட்டுரை இது.
இந்தக் கட்டுரைக்கான தலைப்பை யோசிக்கையில் கண்ணிமை நொடிக்கும் நொடிகளில் மனசுக்குள் இருந்து படியிறங்கியது ஒரு தலைப்பு.
மறுபடியும்
மனசுக்குப் பிடித்த இயக்குநர்களுள் முக்கியஸ்தர் ஐயா. பாலுமகேந்திரா அவர்கள். தன் உதவி இயக்குநர்களுக்கு தகப்பனாகவே இருந்தவர். இவரிடம் சேர வேண்டும் என நினைத்து அவரது தெரு, வீடு என அன்னார்ந்து பார்த்துவிட்டுத் திரும்பிவிடுவேன். நல்லவேளை தப்பித்தார் தகப்பன் என்கிறீர்களா?
சரி விஷயத்திற்கு வாருங்கள் என்கிறீர்கள். விஷயம் என்னவென்றால் 'மறுபடியும்' தான். தலைப்பு அப்படி.
மூன்றும் ஒன்றே
'மீண்டும், மறுபடியும், திரும்பவும்'
மூன்றிற்கும் அர்த்தம் ஒன்றே. அறிவீர்கள். மனசின் ஆழத்திற்குள் நிறைய தங்கமீன்கள் நீந்திக் கொண்டிருக்கும். சமயங்களில் மேல் எழுந்து 'வந்தேன் வந்தேன்' என பாட்டுப்பாடிவிட்டு பக்குவமாக மனசுக்குள் போய்விடும். அப்படி இந்தக் கட்டுரைக்கான தலைப்பை யோசித்தவுடன் மேல் எழுந்துவந்த தங்கமீன் தான் 'மறுபடியும்' எனும் தலைப்பு.
'மறுபடியும்' என்கிற பதம் பரமபத ஆட்டத்தை நினைவுபடுத்தும். பரமபதம் விளையாடியிருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லையென்றால் கூகுள் சந்தைக்குள் 'பரமபத விளையாட்டு' என ஒரு தட்டுத் தட்டிப் பாருங்கள். இப்பவே தட்டிவிடாதீர்கள். மறுபடியும் வருவீர்களா என்பது சந்தேகமே. காரணம் நுழையும் சந்தை அப்படி. சரி மறுபடியும் கட்டுரைக்குத் திரும்புவோமாக.
விவிலியத்தில் 'உடனே' என்கிற சொற்பதம் நிறைய இடங்களில் வரும். இயேசு சொன்ன உடனே முடமானவன் எழுந்து நடந்தான். மரித்த லாசர் உடனே உயிர் பெற்று எழுந்தார். புயலை இயேசு கடிந்த உடனே கடலின் சீற்றம் தணிந்தது. இப்படி நிறைய இடங்கள் உடனேவுக்கு
உண்டு.
'உடனே' என்கிற சொற்பிரவாகத்திற்குள் நிறைந்து வழிவது 'நம்பிக்கை', 'விசுவாசம்' என்றால் ஒப்புக்கொள்வீர்கள் தானே.
உடனேவைப் போலவே 'மறுபடியும்' என்கிற சொற்பதத்திற்குள் என்ன விஷயங்கள் எல்லாம் ஊற்றாக நமக்குள் பிரவாகமெடுக்கும்? யோசிக்கிறீர்கள் தானே. யோசித்துக் கொண்டே இருங்கள். கண்ணிமை நொடிக்குள் பதில் வரும். வரட்டும்.
எழுத யோசிக்காமல்
தொடர்ந்து
எழுதும் யோசனைக்குள் வருகிறேன்.
வாசித்து தங்களின் எண்ணங்களை முடிந்தால் விரும்பினால் பகிருங்கள்.
நெடிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் மனப்பறவையில் சந்தித்தது, இனி தொடர்ந்து சந்திக்க இருப்பது இவை எல்லாம்...
என்ன சொல்ல...?
எல்லாம் நேரம் தான்.
என்கிறீர்களா?
உண்மையில்
'நேரம்' தான் காரணம்.
மறுபடியும் நீண்ட
இடைவெளி விடாமல்
உடனே எனச் சொல்ல மாட்டேன். உடனுக்குள் உறையும் நம்பிக்கையோடு, விசுவாசத்தோடு சொல்வேன். சொல்கிறேன்.
மறுபடியும் மனப்பறவைக்குத் திரும்புவீர்கள். அப்போது தாமதிக்காமல் உடனே 'மறுபடியும்' பதத்தினை பதம் பிரிக்கலாம்.
தொடர்ந்த வாசிப்பிற்கு
நன்றிகள் பல...
மனப்பறவை பறக்கும்
பழம் நினைவுகள் உண்ணும்
மீண்டும் பறக்கும்.
மேல் எழும்ப பறவைக்கு சிறகுகள் போதும்...
#இருதய். ஆ
Www.
மனப்பறவை.com
blogWlccansy7knb.com
Blog
https://www.youtube.com/
@manamkothumparavai43
#காணொளி
ஒரு மனம் இரு சிறகு
தொடர்தலுக்கு நன்றி
No comments:
Post a Comment